Last Updated on Saturday, 19 May 2012 07:02 Written by peedo Saturday, 19 May 2012 07:00
நினைவு வைபவமாக நடத்தப்படும் யுத்த வெற்றி விழாவை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்த செய்தியில் விடுவித்த நாட்டை அபிவிருத்தி செய்து சரியான பாதையில் இட்டுச்சென்று பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாத்த படை வீரர்களுக்கு வழங்கக் கூடிய உரிய கௌரவமாக இருக்கும். என தெரிவித்தார்.
Last Updated on Saturday, 19 May 2012 07:00 Written by peedo Saturday, 19 May 2012 06:58
அக்கரைப்பத்தனை டொறிங்டன் தமிழ் பாடசாலையில் தரம் 3 இல் கல்வி கற்று வந்த 8 வயதான சியாலனி என்ற மாணவி கடந்த 15ம் திகதி பாடசாலையில் விளையாடிக்கொண்டிருக்கும் போது திடீரென கீழே விழுந்ததாகவும் அதன் பின் பாடசாலை நிருவாகம் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
Last Updated on Saturday, 19 May 2012 06:58 Written by peedo Saturday, 19 May 2012 06:55
தென்னாபிரிக்கா செல்வதற்கு கட்டுநாயக்கா விமான நிலயத்திற்கு வந்தபோது குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நுகேகொடை, உடக முல்லையைச் சேர்ந்த நிசான் தில்ருக்ஸ் போலி விசா பதியப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இக்குற்றத்திற்காக 10 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 100000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Last Updated on Friday, 18 May 2012 10:43 Written by peedo Friday, 18 May 2012 10:41
இன்று பீடோ நிறுவனத்தின் அக்கரைப்பற்று கிளைக் காரியாலயத்தில் ஜனாதிபதியின் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் நிறைவேற்றுப் பணிப்பாளர் டி.ஆர்.கு.புஸ்பகுமார் அவர்களின் பணிப்புரைக்கு அமைய 15 பயனாளிகளுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு கடனுதவி வழங்கப்பட்டது.
Last Updated on Friday, 18 May 2012 10:41 Written by peedo Friday, 18 May 2012 10:34
எமது பிரதேசத்தின் ஓய்வு பெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.கணேசமூர்த்தி திலகவதி அவர்களின் கடந்த கால சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மு.ப.10.00 மணியளவில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வினை பீடோ சீடோ நிறைவேற்றுப் பணிப்பாளர், சூரிய உதய அபிவிருத்தி ஒன்றிய தலைவர் மற்றும் ஜனாதிபதியின் இணைப்பாளர் Dr.கு.புஸ்பகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
Page 1 of 47